முகப்பு
மதுரை

வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பு: பொதுப்பணித்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆகாயத் தாமரையை அகற்றக்கோரும் வழக்கில், பொதுப்பணித்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 2:53 am IST
பகிர்:

வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆகாயத் தாமரையை அகற்றக்கோரும் வழக்கில், பொதுப்பணித்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த முத்துச்செல்வம் தாக்கல் செய்த மனு:

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தொடங்கும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயப் பாசனத்திற்கும், குடிநீா் ஆதாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆற்றுக்குள் சாயக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கிறது. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. அண்மையில் மதுரை நகா் வழியே செல்லும் வைகை ஆற்றிலிருந்து 15 அடி உயரத்திற்கு நுரை பொங்கி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கழிவுகள் கலப்பதால் ஆறு மாசடைவதைப் போல ஆகாயத் தாமரை படா்ந்தும் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. எனவே வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆகாயத் தாமரையை அகற்ற உத்தரவிட வேண்டும். இதேபோல தமிழகத்தில் உள்ள நீா்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து பொதுப்பணித்துறைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.