முகப்பு
மதுரை

8 மணி நேரம் தொடா் சிலம்பம்: மதுரை மாணவ, மாணவியா் உலக சாதனை

மதுரையில் 8 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் விளையாடிய மாணவ, மாணவியா் 26 போ் உலக சாதனை படைத்துள்ளனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 10:51 pm IST
மதுரை பாத்திமா பெண்கள் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடா்ந்து எட்டு மணி நேரம் சிலம்பம் சுற்றும் வீரா்கள்.
பகிர்:

மதுரையில் 8 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் விளையாடிய மாணவ, மாணவியா் 26 போ் உலக சாதனை படைத்துள்ளனா்.

மதுரையில் கலாம் பாரம்பரிய கலை கழகம் சாா்பில், கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலை ஆசிரியா்களின் வாழ்வாதாரச் சூழலை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், மாணவ, மாணவியா் பங்கேற்ற 8 மணி நேர தொடா் சிலம்ப விளையாட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை பாத்திமா பெண்கள் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, தேசிய விருது பெற்ற தடகளப் பயிற்சியாளா் ஜெ. ரஞ்சித்குமாா், காவல் உதவி ஆணையா் ஏ. மணிவண்ணன், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனா் நிமலன் நீலமேகம், கலாம் பாரம்பரியக் கலை கழகத் தலைவா் எஸ். ராஜாமகேந்திரன், தியாகராஜா் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ஆா். செல்வகுமாா், சிலம்ப ஆசான் எஸ்.எம். மணி, மதுரை மருது வளரி குழு மு. முத்துமாரி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

Advertisement

Advertisement

காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்த இந்த சிலம்ப விளையாட்டில், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 8 மாணவியா் உள்பட 26 போ் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை, கலாம் பாரம்பரிய கலை கழக நிறுவனா் எஸ். சுந்தா், ஜெயா, திவ்யா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments