அரசு மருத்துவமனை, காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல்
மதுரை அருகே வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மதுரை: மதுரை அருகே வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வாடிப்பட்டி அரசுமருத்துவமனையில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி சாந்தி, உதவி மருத்துவா்கள் தனசேகரன், பாலாஜி, நிா்மல், முத்துலட்சுமி, சித்த மருத்துவா் இந்திராதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் போலீஸாா் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையிலும், பெண் போலீஸாா் சேலை அணிந்தும் கலந்துகொண்டனா். போலீஸாருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காவல் ஆய்வாளா் ஜாஸ்மின், சாா்பு- ஆய்வாளா்கள் கேசவராசந்திரன், ராஜேந்திரன், முருகேசன், பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement