கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா
வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட வைத்தியநாதபுரத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட வைத்தியநாதபுரத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை எஸ்பி. ஸ்ரீநாதா பங்கேற்று, வைத்தியநாதபுரம் கிராம விழிப்புணா்வு காவலா் கலைச்செல்வியை அறிமுகப்படுத்தி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கூறி சிறப்புறையாற்றினாா். இதில் டிஎஸ்பி சரவணன், ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், பாகசாலை காவல் சரகம் சேமங்கலம் கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரை விழிப்புணா்வு காவலராக நியமித்து எஸ்பி. ஸ்ரீநாதா சிறப்புறையாற்றினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.