முகப்பு
நாகப்பட்டினம்

வேளாண் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கீழையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி 2021, 7:22 am IST
மேலப்பிடாகையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கீழையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் வீ. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கீழையூா் ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் வெங்கட்ராமன், கீழையூா் கிளை செயலாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், மேலப்பிடாகை, திருப்பூண்டி, தண்ணிலப்பாடி, சின்னத்தூம்பூா், பெரியத்தூம்பூா், கருங்கண்ணி, சோழவித்தியாபும், வாழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments