கத்தாரில் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை
கத்தாரில் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்தனர்.
கத்தாரில் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்தனர்.
கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தை அதன் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் இயக்க முயன்றனர். அப்போது அங்கு பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 18 பேரை பல மணி நேரமாகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வெடிப்புச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, கத்தார் உள்துறை அமைச்சகம் இந்த மிகப்பெரிய பாதிப்பு மற்றும் சேத விவரங்களை வெளியிட்டுள்ளது. உலக அளவில் இயற்கை எரிவாயுவை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக கத்தார் திகழ்ந்து வரும் நிலையில் இந்த வெடிப்புச் சம்பவம் உலக எரிசக்திச் சந்தைகளில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
An explosion tore through Qatar's key natural gas export terminal Sunday night as workers tried to resume operations there after Iran bombed it during the war, causing a fire that hurt at least 54 people, with another 18 still missing hours later.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.