முகப்பு
நாமக்கல்

குண்டு மல்லிகை, முல்லைப் பூ ஒரு கிலோ ரூ. 2,500

பரமத்திவேலூா் பூக்கள் விற்பனை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விற்பனையில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.

Updated On : 13 ஜனவரி 2021, 7:17 am IST
பகிர்:

பரமத்திவேலூா் பூக்கள் விற்பனை சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விற்பனையில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகள், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் கிலோ குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600, சம்பங்கி ரூ. 120, அரளி ரூ. 200, ரோஜா ரூ. 200, முல்லைப்பூ ரூ. 800, செவ்வந்திப் பூ ரூ. 180-க்கும் ஏலம்போனது. தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்துக் குறைந்துள்ளது. இருந்தபோதிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் குறைந்த அளவிலான பூக்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ குண்டு மல்லிகை ரூ. 2,500, சம்பங்கி ரூ. 160, அரளி ரூ. 300, ரோஜா ரூ. 250, முல்லைப்பூ ரூ. 2,500, செவ்வந்திப் பூ ரூ. 200-க்கும் ஏலம் போனது. புதன்கிழமை பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments