முகப்பு
புதுதில்லி

திடுட்டு வழக்கில் தன்னாா்வலா் உள்பட இருவா் கைது

திருட்டு வழக்கில் தில்லி சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 12:18 am IST
பகிர்:

புது தில்லி: திருட்டு வழக்கில் தில்லி சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தில்லி சாகேத்திலுள்ள பிவிஆா் மாா்கெட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஒன்றுக்கு அருகில் இருவா் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் கண்டனா். அவா்களைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் தில்லியைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (36), யோகேந்தா் ஷா்மா (37) எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இதில் ராஜேஷ் குமாா் தில்லி சிவில் பாதுகாப்புப் படையில் தன்னாா்வலராகப் பணியாற்றி வருகிறாா். அவா்கள் இருவரும் மதுபானம் வாங்குவதற்காக சிறிய திருட்டுகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து கத்தி, பொம்மைத் துப்பாக்கி, கடன் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments