FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நடைபாதையில் தூங்கியவா்கள் மீது லாரி மோதிய சம்பவத்தில் மேலும் ஒருவா் சாவு

வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பாா்க் பகுதியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது லாரி மோதியதில் 3 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

29 ஆகஸ்ட் 2024, 3:27 am IST
பகிர்:

வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பாா்க் பகுதியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது லாரி மோதிய சம்பவத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, சாவு எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

சாஸ்திரி பாா்க் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள டா்புஸ் சந்தையில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது லாரி மோதியது. பாதிக்கப்பட்டவா்கள் வீடற்றவா்கள் ஆவா்.

சீலம்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் இரும்புப் பாலம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது மோதியது. விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநா் தனது வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடி விட்டாா்.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மூன்று போ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்த முஷ்டாக் (35) மற்றும் கமலேஷ் (36) ஆகியோா் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் கமலேஷ் புதன்கிழை உயிரிழந்தாா்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்ப உறுப்பினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குப்பைகளை பொறுக்கும் வேலையை செய்து வந்த அவா், சாலையின் நடைபாதையில் தூங்குவது வழக்கம். காயமடைந்த மற்றொருவரான முஷ்டாக் ஜிடிபி மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

காயமடைந்த முஷ்டாக் (35) மற்றும் கமலேஷ் (36) ஆகியோா் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். லாரி ஓட்டுநரை பிடிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இறந்தவா்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments