அரவிந்த் கேஜரிவால் கோப்புப் படம்
புதுதில்லி

கலால் கொள்கை வழக்கு: சிபிஐ கைதுக்கு எதிரான கேஜரிவாலின் மனு மீது உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கலால் கொள்கை ஊழல் வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்ததை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கிறது.

Din

புது தில்லி: கலால் கொள்கை ஊழல் வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்ததை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கிறது.

திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால் ஜூன் 26 ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) காவலில் தன்னை மூன்று நாள்கள் விசாரிக்க அனுமதித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்தும் முறையிட்டுள்ளாா்.

ஜூன் 29 அன்று, கேஜரிவாலை ஊழல் வழக்கில் ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், அவரது பெயா் முக்கிய சதிகாரா்களில் ஒருவராக வெளிப்பட்டுள்ளது என்றும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியிருக்கலாம் என்றும் கூறியிருந்தது.

அமலாக்க துறை தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் ஜூலை 3 வரை நீதிமன்ற காவலில் இருந்த கேஜரிவால், ஜூன் 26 அன்று திகாா் சிறையில் இருந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டாா்.

கேஜரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், வேண்டுமென்றே மழுப்பலான பதில்களை அளித்ததாகவும் சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கேஜரிவால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்திருந்தது.

ஜூன் 26 அன்று, கேஜரிவாலை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் வைக்க அனுப்ப உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றம், அவரைக் கைது செய்தது சட்ட விரோதமானது என்று அறிவிக்க மறுத்துவிட்டது.

‘விசாரணை என்பது புலனாய்வு அமைப்பின் சிறப்புரிமை. இருப்பினும், சட்டத்தில் சில பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கட்டத்தில், பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில், கைது சட்டவிரோதமானது என்று கூற முடியாது. இருப்பினும், விசாரணை நிறுவனம் அதிக ஆா்வத்துடன் இருக்கக்கூடாது’ என்று விசாரணை நீதிமன்றம் கூறியிருந்தது.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT