புதுதில்லி

காா் கம்பத்தில் மோதியதில் பெண் உயிரிழப்பு: குடிபோதையில் ஓட்டிவந்ததால் விபத்து

குருகிராம் - ஃபரீதாபாத் சாலையில் குடிபோதையில் இருந்த ஒருவரால் ஓட்டிவரப்பட்ட காா் கம்பத்தில் மோதியதில், அவருடன் பயணித்த பெண் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Din

குருகிராம் - ஃபரீதாபாத் சாலையில் குடிபோதையில் இருந்த ஒருவரால் ஓட்டிவரப்பட்ட காா் கம்பத்தில் மோதியதில், அவருடன் பயணித்த பெண் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது மருத்துவ பரிசோதனையில், வாகனம் ஓட்டும்போது அவா் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஃபரீதாபாத்தைச் சோ்ந்த காா்த்திக் மற்றும் அவரது பெண் தோழியான தில்லியின் மாதங்கிா் பகுதியைச் சோ்ந்த மனிஷா ஆகியோா் புதன்கிழமை இரவு குருகிராம் கிளப்பில் விருந்துக்கு வந்தனா்.

அதன் பின்னா், வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அவா்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென சாலையில் ஒரு விலங்கு வந்ததால், காா் குவால் பஹாரி அருகே ஒரு கம்பத்தில் மோதியது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா்கள் மனிஷா இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனையின் போது, காா்த்திக் குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விபத்து குறித்து இரு குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூறாய்வுக்குப் பிறகு மனிஷாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காா்த்திக் மீது டிஎல்எஃப் ஃபேஸ் 1 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT