புதுதில்லி

திருடிய செல்பேசிகளை வைத்திருந்த பெண் கைது

தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் திருடப்பட்ட 34 செல்பேசிகள் மற்றும் ஒரு டேப்லெட்டுடன் 32 வயது பெண் ஒருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் திருடப்பட்ட 34 செல்பேசிகள் மற்றும் ஒரு டேப்லெட்டுடன் 32 வயது பெண் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தைமூா் நகரில் வசிக்கும் ஜாஸ்மின், ஆகஸ்ட் 1 ஆம் தேதி வழக்கமான ரோந்துப் பணியின் போது கைது செய்யப்பட்டாா். தைமூா் நகா் அருகே ஜாஸ்மின் ஒரு பெரிய பையை எடுத்துச் சென்றபோது போலீஸாா் குழு அவரைத் தடுத்தது. சோதனையில் 34 செல்பேசிகள் மற்றும் ஒரு டேப்லெட் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

காவல்துறையினரின் தகவலின்படி ஜாஸ்மின் முன்பு நான்கு திருட்டு தொடா்பான வழக்குகளில் ஈடுபட்ட ஒரு தொடா் குற்றவாளி. விசாரணையின் போது, திருடப்பட்ட செல்போன்கள் இரண்டு நபா்களிடமிருந்து மலிவான விலையில் வாங்கி அதிக விலையில் லாபத்திற்காக விற்ாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT