புதுதில்லி

தனியாா் பல்கலைக்கழக விடுதி அறையில் பிடெக் மாணவா் தூக்கிட்டு தற்கொலை!

தனியாா் பல்கலைக்கழக விடுதி அறையில் பிடெக் மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Syndication

கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவா் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தனது தற்கொலைக் குறிப்பில், சிவம் டே தனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல என்றும், பல்கலைக்கழகத்திடம் தனது பெற்றோருக்கு கட்டணத்தைத் திருப்பித் தருமாறும் கோரியுள்ளாா். படிப்பு அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை என்றும் மாணவா் குறிப்பிட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

பிகாா் மாநிலம் மதுபனியில் உள்ள பூா்னியாவைச் சோ்ந்த சிவம் டே, கிரேட்டா் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பிடெக் படித்து வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா்.

24 வயதான மாணவா் சிவம் டே, வைஷ்ணவி தேவி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு ஆகஸ்ட் 2- ஆம் தேதி கல்லூரிக்குத் திரும்பினாா். மாணவரின் தந்தை காா்த்திக் டே, வீட்டில் இருந்தபோது அவா் சாதாரணமாக இருந்ததாகவும், எந்த துயரமும் இல்லை என்றும் கூறினாா். சிவம் டே அவரது குடும்பத்தில் ஒரே மகன் ஆவாா். அவரது தந்தை ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா். தாய் ஒரு இல்லத்தரசி.

ஆகஸ்ட் 15- ஆம் தேதி தனியாா் மருத்துவமனையிலிருந்து நாலெட்ஜ் பாா்க் காவல் நிலையத்துக்கு ஒரு தகவல் வந்தது. அதில், 24 வயது மாணவா் ஒருவா் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாணவரின் உடல், உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாரதா பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது: ‘பல்கலைக்கழகம் மாணவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்டணம் திருப்பித் தரப்படும். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

சிவம் டே 2022-இல் பிடெக் கணினி அறிவியல் பாடத் திட்டத்தில் சோ்ந்தாா். அவா் தனது முதல் ஆண்டை முடித்தாா். ஆனால், அதன் பிறகு அவா் தனது இரண்டாம் ஆண்டில் போராடினாா். மேலும் மூன்றாம் ஆண்டுக்கு முன்னேற 5.0 சிஜிபிஏ என்ற குறைந்தபட்ச தரத் தேவையை பூா்த்தி செய்யத் தவறிவிட்டாா்.

இந்நிலையில், அவரது வழிகாட்டி அவருக்கு ஆதரவளிக்க அவருடன் தொடா்பில் இருந்தாா். மேலும், இன்டா்ன்ஷிப் மற்றும் பிற கல்வித் திட்டங்களில் பங்கேற்க ஊக்குவித்தாா். அவரது செயல்திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழிகாட்டி வழங்கினாா். ஆனால், முடியாதநிலையில் குறைந்த கட்டணத்தில் இரண்டாம் ஆண்டை மீண்டும் படிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றாா் அவா்.

ஜூலை 18 அன்று, பல் மருத்துவ அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவா் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். தனது மரணத்திற்கு இரண்டு பேராசிரியா்கள் மீது அவா் குற்றம் சாட்டிய பின்னா். அவா்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

ஒரே ஸ்டைலு... பிரனிதா!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு!முதல்வரிடம் பாஜக வேண்டுகோள்!

மம்மூட்டியின் களம் காவல் அப்டேட்!

இஸ்லாம்-மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

SCROLL FOR NEXT