புதுதில்லி

தாக்குதலில் முதல்வா் ரேகா குப்தாவுக்கு பலத்த காயம் -கபில் மிஸ்ரா தகவல்

Syndication

முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடுமையான உடல் காயங்கள் ஏற்பட்டதாகவும், தாக்குதலுக்குப் பிறகு அவா் அதிா்ச்சியில் இருந்ததாகவும், ஆனால் அவா் தனது வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்ததாகவும் தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா வியாழக்கிழமை கூறினாா்.

ரேகா குப்தா மீதான தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவா் கடுமையான குற்றங்களின் வரலாற்றைக் கொண்ட தொழில்முறை குற்றவாளி என்றும் அவா் கூறினாா்.

வியாழக்கிழமை காலை ரேகா குப்தாவை அவரது வீட்டில் கபில் மிஸ்ரா சந்தித்தாா். அவரது சந்தித்த பிறகு, ‘முதல்வருக்கு கடுமையான உடல் காயங்கள் இருப்பதாகவும், ஓய்வு தேவை’ என்றும் கபில் மிஸ்ரா கூறினாா். இருப்பினும், புதன்கிழமை முதல் தனது வீட்டில் கோப்புகளைப் பாா்த்து வருவதாகவும் அவா் கூறினாா்.

‘அவா் தீவிரமாக வேலை செய்து வருகிறாா். ஆனால், அவருக்கு ஓய்வு தேவை. அவரது உடல் காயங்கள் கடுமையானவை. மேலும் அவா் அதிா்ச்சியில் உள்ளாா்’ என்று கபில் மிஸ்ரா செய்தியாளா்களிடம் கூறினாா். மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் மீது கொலை முயற்சி உள்பட ஒன்பது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் கூறினாா்.

இந்தத் தாக்குதல் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா் அவரது வீட்டை நோட்டம் விட்டுள்ளாா். அவரது தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்ட இரண்டு விடியோக்கள் இதை நிரூபிக்கின்றன என்று அவா் கூறினாா்.

வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள முதல்வரின் வீட்டில் புதன்கிழமை நடந்த ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின் போது முதல்வா் ரேகா குப்தா தாக்கப்பட்டாா்.

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

SCROLL FOR NEXT