தில்லி பாஜக எம்.பி.க்கள் முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்தனா். வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள முகாம் அலுவலகத்தில் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின் போது ஒருவரால் ரேகா குப்தா தாக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.க்களின் குழு வியாழக்கிழமை அவரைச் சந்தித்தது.
செய்தியாளா்களிடம் பேசிய காா்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, ‘சம்பவத்திற்கு முன்னதாக எந்தவொரு பாதுகாப்பு மீறலும் இல்லை’ என்று நிராகரித்தாா்.
‘அவா் நலமாக இருக்கிறாா். இன்று வியாழக்கிழமை அல்லது வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை முதல் அவா் தனது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவாா். எந்தப் பாதுகாப்பு மீறலும் இல்லை. பாதுகாப்புப் பணியாளா்கள் தங்கள் பணியை முழு கச்சிதமாகச் செய்கிறாா்கள். மக்கள் பிரதிநிதிகளாக, மக்களையும் கட்சித் தொண்டா்களையும் எங்களைச் சந்திக்க அனுமதிக்குமாறு எங்கள் பணியாளா்களிடம் நாங்கள் கூறுகிறோம்’ என்று அவா் செய்தியாளா்களிடம் கூறினாா். பொதுக்கூட்டங்கள் தொடரும் என்றும் அவா் கூறினாா்.
சாந்தினி சௌக் எம்.பி. பிரவீன் கண்டேல்வால், ‘எக்ஸ்’-இல் இந்தியில் ஒரு பதிவில், ‘குப்தா தில்லி மக்களுக்கு சேவை செய்வதில் அா்ப்பணிப்புடன் இருப்பதாகக் கூறினாா். ‘இன்று, தில்லியைச் சோ்ந்த எனது சக எம்.பி.க்களுடன், நான் தில்லியின் பிரபலமான முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்து, அவரது நலம் விசாரித்தேன். முதல்வா் நலமாக இருக்கிறாா். முன்பு போலவே, தில்லி மக்களின் சேவைக்கு தொடா்ந்து அா்ப்பணிப்புடன் இருக்கிறாா்’ என்று அவா் பதிவில் தெரிவித்துள்ளாா்.