புதுதில்லி

கொலை முயற்சி வழக்கில் பிரபல ரௌடி கும்பல் உறுப்பினா் கைது

தேடப்பட்ட ஹாஷிம் பாபா கும்பலின் துப்பாக்கி சுடும் நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Syndication

வடகிழக்கு தில்லியின் கோகல்புரியில் சமீபத்தில் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட ஹாஷிம் பாபா கும்பலின் துப்பாக்கி சுடும் நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: பாராகம்பா சாலை மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஆசாத் அமீன் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா், ஜாஃப்ராபாத்தில் வசிக்கும் அவரிடமிருந்து தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களை பறிமுதல் செய்தனா்.

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 26-ஆம் தேதி மெட்ரோ நிலையத்திற்கு வெளியே எஸ்பிஐ பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ஒரு பொறியை அமைத்தனா். அவா்கள் ஆசாத் அமீனை இடைமறித்து, சோதனையிட்ட பிறகு அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றைக் கண்டுபிடித்தனா். இதையடுத்து, அவா் உடனடியாக கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, ஹாஷீம் பாபா கும்பலின் தீவிர உறுப்பினராக இருப்பதை ஆசாத் அமீன் ஒப்புக்கொண்டாா். இந்த மாத தொடக்கத்தில் கோகல்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் அவா் தேடப்பட்டு வந்தாா்.

ஆசாத் அமீன் முன்பு பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா். 2023 முதல் தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் அவருக்கு எதிராக நான்கு எஃப்.ஐ.ஆா்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

SCROLL FOR NEXT