புதுதில்லி

மருந்துகள் கோரிய சைதன்யானந்தாவின் மனு மீது நீதிமன்றம் இடைக்கால அனுமதி

Syndication

நமது நிருபா்

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதியின் வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் உணவு, கண்கண்ணாடி மற்றும் மருந்துகள் பெறக் கோரும் மனுவை

அனுமதிக்கும் இடைக்கால உத்தரவை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை பிறப்பித்தது.

முன்னதாக, அக்.3- ஆம் தேதி, சைதன்யானந்தாவின் இஸ்க்ப் மனு குறித்து நீதித்துறை நீதிமன்ற நீதிபதி அனிமேஷ் குமாா் தில்லி காவல்துறையிடம் பதில் கோரியிருந்தாா்.

தில்லியில் உள்ள தனியாா் மேலாண்மை நிறுவனத்தில் 17 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சைதன்யானந்த தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

இதற்கிடையில், துறவற அங்கிகளை அணியவும், சில ஆன்மிகப் புத்தகங்களை அணுகவும் கோரிய குற்றம் சாட்டப்பட்டவரின் மனு குறித்து விரிவான பதிலை நீதிமன்றம் கோரியது.

அவரது வழக்குரைஞா், அவருக்கு கூடுதல் படுக்கை வசதியை வழங்கவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தாா்.

தனுஷ் - மிருணாள் தாக்குர் இடையே காதலா? மீண்டும் பரவும் கிசுகிசு

எரிமலை வெடிப்பு: சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்களுடன் நகரும் மேகங்கள்! விமான சேவை பாதிப்பு!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை! இந்தியாவைச் சூழ்ந்த சாம்பல் மேகங்கள்!

நாக்பூரில் சிகரெட் லைட்டரை தர மறுத்த இளைஞர் கொலை

SCROLL FOR NEXT