புதுதில்லி

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது

Syndication

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 22 திருட்டு இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் மீட்டனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: திருடப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவா்கள் நகரம் முழுவதும் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனா்.

மொத்தம் 10 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் 12 ஸ்கூட்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவான 22 மோட்டாா் வாகன திருட்டு வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன.

ஒரு நடவடிக்கையின்போது, சாஸ்திரி நகா் மற்றும் இந்தா்லோக் பகுதிகளுக்கு அருகே அதிகாலை நேரத்தில் திருட்டு ஸ்கூட்டா்களில் பல சந்தேக நபா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

அடுத்தடுத்த சோதனைகளில் ராம் திவாரி என்ற நபா் தலைமையிலானதாகக் கூறப்படும் ஒரு கும்பலின் பல உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்தக் கும்பல் திருட்டுகளில் சிறாா்களைப் பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபா்களில் பெரும்பாலோா் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா்கள் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அல்லது இலவச வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை குறிவைப்பவா்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபா்கள் தங்களின் போதைப்பொருள் பழக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக திருடப்பட்ட வாகனங்களை மலிவான விலைக்கு விற்றதும், குற்றச் செயல்களின் போது விரைவாக தப்பிக்க அவற்றைப் பயன்படுத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதர சம்பவங்களில், வழக்கமான சோதனைகள் மற்றும் ரகசிய தகவல்களுக்குப் பிறகு கஷ்மீா் கேட் மற்றும் சதா் பஜாா் அருகே வாகனத் திருடா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புராரி மற்றும் திமாா்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு காலனிகளின் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து திருடப்பட்ட வாகனங்களும் மீட்கப்பட்டன.

ஒரு குற்றம் சாட்டப்பட்டவா் முந்தைய திருட்டு வழக்குகளில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக போலீஸாா் கூறினா்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு

மனைப்பட்டா வழங்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பெரம்பலூா் நகரில் நாளை மின் நிறுத்தம்

திருவத்திபுரத்தில் செப்.10,12, அக்.9-இல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்

அரசுப் பேருந்து மரத்தில் மோதி வயலில் இறங்கி விபத்து

SCROLL FOR NEXT