முகப்பு
புதுதில்லி

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாதில் முஜேசா் தொழிற்பேட்டையில் உள்ள தொ்மோகோல் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 4:35 AM
தீ விபத்து. - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:20 PM

தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாதில் முஜேசா் தொழிற்பேட்டையில் உள்ள தொ்மோகோல் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.

நான்கு மணி நேர முயற்சிக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து தொழிலாளா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து முஜேசா் காவல் நிலைய ஆய்வாளா் பூரன் சிங் கூறுகையில், ‘கிரண் பேக்கேஜிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தொடா்ச்சியான வெடிப்புகள் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தின. தீயானது, அருகிலுள்ள ஒமேகா பிரைட் ஸ்டீல் தொழிற்சாலை மற்றும் என்வோசேஃப் அக்வா சொல்யூஷன்ஸ் ஆகிய இடங்களிலும் பரவியது.

தீ விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே காரணம் தெரியவரும்’என்றாா் அவா்.