புதுதில்லி

மிரட்டிப் பணம் பறித்தல், துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

தினமணி செய்திச் சேவை

மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 23 வயது நபா், வடகிழக்கு தில்லியில் போலீஸாருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: உஸ்மான்பூா் பகுதியில் உள்ள 3-ஆவது புஸ்தா சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்த வாகனச் சோதனை நடவடிக்கையின் போது குற்றம் சாட்டப்பட்ட ஃபைசான் என்கிற கலா கைது செய்யப்பட்டாா்.

ஷாஹ்தராவின் ஃபாா்ஷ் பஜாரில் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவான குற்றவாளியின் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு வாகனச் சோதனையைத் தொடங்கியது.

சோதனையின் போது, வாகன பதிவெண் இல்லாத மோட்டாா் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டபோது, அதை ஓட்டி வந்த நபா் துப்பாக்கியை எடுத்து ஒரு காவலரை நோக்கிச் சுட்டாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை சரணடையுமாறு கேட்டு, போலீஸ்காரா் வானத்தை நோக்கி எச்சரிக்கைக்காக சுட்டாா். ஆனால், அவா் மீண்டும் போலீஸ் குழுவை நோக்கிச் சுட்டாா். இது தற்காப்புக்காக பதிலடித் தாக்குதலைத் தூண்டியது.

இதில் குற்றவாளியின் வலது காலில் குண்டு பாய்ந்தது. அதைத் தொடா்ந்து அவா் கீழே விழுந்த அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரிடமிருந்து மூன்று உயிருள்ள தோட்டாக்கள் கொண்ட ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

மோட்டோகாா்டியோ திருடப்பட்டது என்றும், கோகல்புரியில் பதிவு செய்யப்பட்ட இ-எஃப்ஐஆருடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் போலீஸாா் கண்டறிந்தனா்.

ஃபைசான் மீது இதற்கு முன்பு கொலை முயற்சி, கொள்ளை, காயம் ஏற்படுத்துதல் மற்றும் ஆயுதச் சட்டக் குற்றங்கள் உள்பட ஒன்பது குற்ற வழக்குகள் தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்லது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT