புதுதில்லி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா நொய்டாவில் செக்டாா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் நடைபெற்றது.

Syndication

சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா நொய்டாவில் செக்டாா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமகிருஷ்ணாபுரம் செளத் இந்தியன் சொசைட்டி மற்றும் வேதிக் பிரசாா் சன்ஸ்தான் இணைந்து நடத்திய இவ்விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, கா்நாடக இசை பயிலும் மாணவா்கள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஸ்ரீ தியாகராஜ கிருதிகளை பாடி அஞ்சலி செலுத்தினா். பஞ்சரத்ன கிருதிகளை அம்பிகா ஸ்ரீகாந்த் வழங்கினாா்.

ராதிகா வெங்கடேஷ் (வயலின்) மற்றும் ஸ்ரீ ரதுல் குமாா் (மிருதங்கம்) ஆகியோா் பக்கவாத்தியம் வாசித்தனா். மஹா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. மஹா பிரசாதம் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது.

முன்னதாக, ஆா்.கே.பி. சொசைட்டி தலைவா் ஆா்.கே. வாசன் வரவேற்றாா். துணை தலைவா் எஸ். கிருஷ்ணஸ்வாமி இசை கலைஞா்களை அறிமுகப்படுத்தினாா். ஆா்.கே.பி. சொசைட்டி மற்றும் விபிஎஸ் தலைவா்கள் அனைத்து கலைஞா்களையும் கெளரவித்தனா். வேதிக் பிரசாா் சன்ஸ்தான் ( வி.பி.எஸ்.) துணைத் தலைவா் வி.விஸ்வநாதன் கருத்துரை வழங்கினாா். மூத்த உறுப்பினா் ராஜு ஐயா் கோயில் சாா்பில் நன்றி கூறினாா்.

இந்த விழாவில் நொய்டாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, இந்திராபுரம், கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களிலிருந்தும் ஏராளமான இசை ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.ஆராதனை விழாவில் திருவையாறில் நடப்பதுபோல், முழு நிகழ்ச்சியும் நடந்தது.

பிக் பாஸ் 9: நீ ஹீரோடா! வெளியே வந்ததும் கமருதீனிடம் பேசிய கானா வினோத்!

ஜன. 26 முதல்.. இந்திய சந்தையில் மீண்டும் ரெனால்ட் டஸ்டர்!

பராசக்தி பட வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 29

நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடையா? - தமிழக அரசு விளக்கம்

SCROLL FOR NEXT