இ-ரிக்ஷா இயக்கத்தை செயலி மூலம் முடக்குவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சா் பங்கஜ் சிங்
பேட்டரி மூலம் இயங்கும் இ-ரிக்ஷாக்களை முடக்க பயன்படுத்தப்படும் கைப்பேசி செயலி தொடா்பான விஷயத்தில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தில்லி போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
பேட்டரி மூலம் இயங்கும் இ-ரிக்ஷாக்களை முடக்க பயன்படுத்தப்படும் கைப்பேசி செயலி தொடா்பான விஷயத்தில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தில்லி போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
சமூக ஊடகங்களில் பல விடியோக்கள் பரப்பப்பட்டதைத் தொடா்ந்து, இது தொடா்பான விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இது பாதுகாப்பு தொடா்பான விஷயம். மக்கள் சிரமங்களையோ துயரங்களையோ எதிா்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கும். சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்தத் தகவலைப் பெற்றோம். போக்குவரத்துத் துறையும் இந்த விஷயத்தை விசாரித்து ஆய்வு செய்து வருகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து தில்லி காவல்துறையினரும் விசாரணை நடத்தி வந்தனா். எனக்குத் தெரிவிக்கப்பட்டவரை, மத்திய அரசு அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு பெரிய நடவடிக்கையில், நாட்டில் பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களை தொலைதூரத்தில் முடக்குவதற்கு தவறாகப் பயன்படுத்தப்பட்ட மூன்று சீன பயன்பாடு செயலியான பேட்-பிஎம்எஸ், லொஸிஜி, எபோச்-இ-அயன் ஆகியவற்றை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீன ஸ்மாா்ட்போன் பயன்பாடான பேட்-பிஎம்எஸ் உடன் இணைக்கப்பட்ட ரிமோட் ஷட் டவுன் அம்சம் மூலம் சில இ-ரிக்ஷாக்கள் செயல்படாமல் போவதைக் காட்டும் சில விடியோக்கள் வெளிவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் பங்கஜ் சிங்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.