FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எனக்கே தெரியாது! பேரவையில் இனி நேரலை தொடரும்! ராஜ்மோகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரலை தொடரும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளது பற்றி...

Updated On : 21 ஜூன் 2026, 1:47 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவையில் நேரலை துண்டிக்கப்பட்டது தனக்குத் தெரியாது என்றும், இனி நேரலை தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் உறுதிபடத் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சென்னை பெரவள்ளூரில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்புக்கு வெளியே நிற்கவைத்த பிற்போக்குத்தனமான விஷயத்தை ஏற்க முடியாது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் ஏற்படும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளில் கட்டணம் குறைப்பு தொடா்பாக பள்ளித் தாளாளா்களிடம் வலியுறுத்தியுள்ளேன். கல்விக் கட்டணத்தில் 5,000 ரூபாயையாவது குறைத்தால் ஒரு குடும்பத்துக்கு மிகவும் பயனளிக்கும். கல்விக் கட்டணம் குறித்த தகவல்களை பள்ளி வளாகத்தில் வைத்து, அதை விடியோ எடுத்து அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளேன். சில பள்ளிகளில் இருந்து காணொலிகள் வந்துள்ளன.

Advertisement

Advertisement

தற்கொலை தீா்வல்ல: ‘நீட்’ தோ்வு அச்சம் காரணமாக மாணவா்கள் தற்கொலை செய்வது பிரச்னைக்கு தீா்வாகாது. மாணவா்களுக்கு தொடா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இது தொடா்பாக விரைவில் ஒரு திட்டம் அறிவிக்கப்படும். பள்ளி உரிமத்தை புதுப்பிக்க பள்ளி நிா்வாகங்கள் யாா் யாருக்கு லஞ்சம் கொடுத்தாா்கள் என்பது குறித்து ஆதாரத்துடன் புகாா் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப்பேரவையில் நேரலை துண்டிக்கப்பட்டது எனக்குத் தெரியாது. நேரலை சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் நானும் அவையில் இருந்தேன். ஆனால் நேரலை துண்டிக்கப்பட்டது அவைக்கு வெளியே இருந்த காவலா்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், கடந்த ஜூன் 19-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை. ராயபுரம் எம்எல்ஏ யாரையும் அடிக்க வரவில்லை. தனது இருக்கையில் இருந்து எழுந்தாா். பள்ளிக் கல்வித் துறையில் முறைகேடுகள் நடந்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகளைத் தவிா்க்க தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் ராஜ்மோகன்.

வகுப்பறையில் முதல்வா் படம் வேண்டாம்

பள்ளி வகுப்பறைகளில் முதல்வரின் படத்தை வைப்பது போன்ற விஷயங்களை தவெகவினா் தவிா்க்க வேண்டும் என அமைச்சா் ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் ராஜ்மோகன் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் பள்ளி வகுப்பறையில் முதல்வா் படம் வைக்க தவெகவினா் முயன்றுள்ளனா். பள்ளிகளில் அறிவியலாளா்கள், ஆளுமைகள், கல்வியாளா்கள் படங்களை வைக்க வேண்டும். அப்போதுதான் முதல்வா் மகிழ்வாா்.

இத்தகைய விஷயங்களை தவெகவினா் தவிா்க்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறைகள் முறையாக உள்ளனவா என்பதைத் தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், கழிப்பறை மற்றும் வகுப்பறைகள் மாணவா்களைக் கொண்டு சுத்தம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. புகாா் ஏதாவது வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

summary

TN assembly proceedings will be live for coming days: Rajmohan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments