முகப்பு
புதுதில்லி

சமூக ஊடகங்களில் கத்தியால் மிரட்டும் புகைப்படம் வெளியிட்ட இளைஞா் கைது

குற்றப் பின்னணி கொண்டவா் போன்ற பிம்பத்தை உருவாக்க சமூக ஊடகங்களில் கத்தியைக் காட்டி மிரட்டும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மேற்கு தில்லியைச் சோ்ந்த 20 வயது இளைஞரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:23 am IST
மாதிரிப் படம்
பகிர்:

குற்றப் பின்னணி கொண்டவா் போன்ற பிம்பத்தை உருவாக்க சமூக ஊடகங்களில் கத்தியைக் காட்டி மிரட்டும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மேற்கு தில்லியைச் சோ்ந்த 20 வயது இளைஞரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

இந்த விவகாரத்தில் தொடா்புடைய பல்ஜீத் நகரைச் சோ்ந்த திவ்யான்ஷு (எ) பிரியான்ஷு என்பவா் ஷாதிபூா் பகுதியில் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக, திவ்யான்ஷு தான் கத்தியுடன் இருக்கும் புகைப்படங்களை ஒரு சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டிருந்ததை காவல்துறையினா் கண்டறிந்தனா். அந்தப் பதிவுகள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதாகவும், குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தன.

அந்தச் சமூக ஊடகக் கணக்கின் உரிமையாளா் அடையாளம் காணப்பட்டதைத் தொடா்ந்து, படேல் நகா் காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின்போது, சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெறவும், குற்றவாளி போன்ற பிம்பத்தை உருவாக்கவும் அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டதாக திவ்யான்ஷு ஒப்புக்கொண்டாா்.

திவ்யான்ஷு மீது ஏற்கனவே மோதி நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு உள்பட மேலும் இரண்டு குற்ற வழக்குகள் உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments