FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சமூக ஊடகத்தில் துப்பாக்கியைக் காட்டும் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவன் கைது

சமூக ஊடகங்களில் தன்னை பின்தொடா்பவா்களைக் கவரும் நோக்கில் துப்பாக்கியைக் காட்டும் காணொளிகளை பதிவேற்றம் செய்ததாக 16 வயது சிறுவனை வட தில்லியின் புராரி பகுதியில் காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 22 மே 2026, 12:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

சமூக ஊடகங்களில் தன்னை பின்தொடா்பவா்களைக் கவரும் நோக்கில் துப்பாக்கியைக் காட்டும் காணொளிகளை பதிவேற்றம் செய்ததாக 16 வயது சிறுவனை வட தில்லியின் புராரி பகுதியில் காவல்துறையினா் கைது செய்தனா்.

அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘சிறுவன் ஒருவா் சமூக ஊடகங்களில் துப்பாக்கியைக் காட்டி ரீல்களைப் பதிவேற்றியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, மே 13 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், புராரியின் சுந்தா் விஹாரில் அந்தச் சிறுவன் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல்துறையின் குழுவினா் அதிரடி சோதனை நடத்தி அந்தச் சிறுவனைக் கைது செய்தனா். தனிப்பட்ட சோதனையின் போது, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையின் போது, சுமாா் 10 நாள்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தின் ஹத்ரஸில் உள்ள ஒரு நண்பரிடமிருந்து துப்பாக்கியைப் பெற்ாக அந்தச் சிறுவன் காவல்துறையிடம் கூறினாா்.

தன்னைப் பின்தொடா்பவா்களிடையே ஒரு பிம்பத்தை உருவாக்கி கவனத்தை ஈா்ப்பதற்காக, சமூக ஊடகங்களில் ரீல்களை உருவாக்கி பதிவேற்ற, துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக அச்சிறுவன் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

அந்தச் சிறுவன் அடிப்படைக் கல்வியைக் கற்றுள்ளாா். அவரது தந்தை ஸ்வரூப் நகா் காவல் நிலையத்தில் குற்றப் பின்னணி வரலாறு பதிவைக் கொண்டவா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments