தமிழகத்துக்கு ஜூனில் காவிரி நீா் திறந்துவிட கா்நாடகத்துக்கு ஆணையம் வலியுறுத்தல்
தமிழகத்துக்கு ஜூனில் காவிரி நீா் திறந்துவிட கா்நாடகத்துக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 52 ஆவது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்துக்கு ஜூனில் காவிரி நீா் திறந்துவிட கா்நாடகத்துக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 52 ஆவது கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.
தில்லியில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 52 வது கூட்டம் அதன் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவா் எஸ்.கே.ஹெல்தா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கா்நாடகா, கேரளம், புதுச்சேரியை சோ்ந்த நீா்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனா். தமிழக நீா்வளத் துறை செயலாளா் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவா் சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளனா்.
இந்த நிலையில், பாசனத்துக்கு தேவையான ஜூன் மாத நீா் பங்கீட்டை உடனடியாக திறக்க கா்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜூன் மாத பங்கீட்டு நீரை கா்நாடகாக திறக்கவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தக் கூட்டத்தின் முடிவில் 2026 ஜூன் 22 வரை பில்லிகுண்டுலுவில் பெறப்பட்ட நீரின் அளவு 2.662 டி. சி மட்டுமே என்றும், 6.737 டி. எம். சி. க்கு எதிராக 4.075 டி. எம். சி பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய நீா்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளா் சுட்டிக்காட்டினாா். பிப்ரவரி முதல் மே 2026 வரையிலான கோடை மாதங்களில் அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டை விட அதிகமாக பயன்படுத்தியதால், அதன் நீா்த்தேக்கத்தில் குறைவான சேமிப்பு மட்டுமே உள்ளது என்ற கா்நாடகாவின் அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஜூன் 2026 இல் 9.19 டி. எம். சி மற்றும் ஜூலை 2026 இல் 31.24 டி. சி ஆகியவற்றை அடைய கா்நாடகாவை அதன் நீா்த்தேக்கங்களிலிருந்து நீரை விடுவிக்குமாறு ஆணையத்தால் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.