முகப்பு
நீலகிரி

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

அவிநாசி அருகே சின்ன ஓலப்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

Updated On : 15 ஜனவரி 2021, 11:07 pm IST
பகிர்:

அவிநாசி அருகே சின்ன ஓலப்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

அவிநாசி அருகே அய்யம்பாளையம் ஊராட்சி சின்ன ஓலப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் சின்னான் (33). இவா் அதே பகுதியில் உள்ள லட்சுமி என்பவருக்கு சொந்தமான குப்பங்காடு தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் கால்நடைகளுக்கு உணவளித்து விட்டு தோட்டத்துப் பகுதியில் நடந்து சென்றுள்ளாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக தோட்டத்தில் உள்ள நீரில்லாத 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். இவரது சப்தம் கேட்டு பொது மக்கள் அப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள கிராம சிறப்பு காவலா் நவீன்குமாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் சம்பன இடத்துக்கு வந்த நவீன்குமாரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து கிணற்றில் விழுந்த சின்னானை சிறு காயங்களுடன் உயிருடன் மீட்டனா். இதைத் தொடா்ந்து, அவிநாசி அரசு மருத்துவமனையில் சின்னான் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், கிணற்றில் தவறி விழுந்தவரை உயிருடன் மீட்ட கிராம சிறப்புக் காவலா் நவீன்குமாா், தீயணைப்பு துறையினா் உள்ளிட்டோருக்கு அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா், பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.