நோ காம்ப்ரமைஸ்

பேஷண்ட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்த டாக்டர் அந்த டெஸ்ட் எடு, இந்த டெஸ்ட் எடு என்று அலைக்கழிக்க மாட்டார்!

கார்த்திகா வாசுதேவன்

‘பேஷண்ட்டுடன் சில நிமிடங்கள் பேசும் போதே அவரால் பேஷண்ட்டின் உடல்நிலை, மனநிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களைப் பற்றி நன்றாகவே அறிந்து கொள்ள முடியும். அதாவது குடும்ப டாக்டர்களால் மட்டுமே தங்களது பேஷண்ட்டின் உளவியல் சார்ந்தும் அவர்களுக்கான சிகிச்சையை சுலபமான முறையில் புரிந்து கொண்டு மேற்கொள்ள முடியும். பேஷண்ட், டாக்டர் உறவுமுறையில் இந்த நிலை ஆரோக்யமானது மட்டுமல்ல ஒளிவு மறைவற்றதாகவும் இருப்பதால் நம்பகத் தன்மையும் அதிகமிருக்கும்.’

- மேற்கண்ட வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் சென்னை, கே கே நகரில் இயங்கும் அருண் விஜயா மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் எம். அருணாசலம். இவரது வார்த்தைகள் ஒவ்வொன்றுமே பேஷண்ட்டுக்கு மட்டுமல்ல இவருடன் உரையாடக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் சகலருக்குமே உற்சாக டானிக் அளிக்கும் விதமாகவே வெளிப்படுகின்றன. தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணலுக்காக டாக்டரைச் சந்தித்த போது குடும்ப டாக்டர் கான்செப்டை மீட்டெடுத்தல், கூட்டுச் சமூக ஆரோக்ய நிலைப்பாடு மற்றும் நகர்ப்புறச் சேவையில் இன்றைய இளைஞர்களின் பங்கு, முதியோர் நலன், ஒரு தேர்ந்த டாக்டருக்கு இருந்தாக வேண்டிய ‘நோ காம்ப்ரமைஸ்’ நிலைப்பாடு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விரிவாகவும், ஆணித்தரமாகவும் உரையாடினார். நோ காம்ப்ரமைஸில் அவர் பகிர்ந்து கொண்ட அத்தனை தகவல்களுமே பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடிய விஷயங்களாகவே இருக்கக் கூடும். 

நேர்காணலுக்கான முன்னோட்டம் இது...

முழு நேர்காணல் இன்று பிற்பகல் வெளியாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT