ஐரோம் ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண்மணி - தீப்தி ப்ரியா மெஹரோத்ரா ; தமிழாக்கம்: ஜெ.ராம்கி; பக்.158; ரூ.110; கிழக்கு பதிப்பகம், சென்னை. )044- 42009601.
பொதுவாக இந்திய அரசுக்கு எதிரான தேசிய இனங்களின் போராட்டங்களைப் பற்றிய எழுத்துகள் தமிழில் குறைவு. காஷ்மீரிலோ, மணிப்பூரிலோ, தண்டகாரண்ய பகுதிகளிலோ என்ன நடக்கிறது? என்பதை நம்மில் பலரும் அரசும் ராணுவமும் கூறும் தகவல்கள் வாயிலாகவே அறிந்திருக்கிறோம். இத்தகைய சூழலில் வெளியாகியிருக்கும் இந்த நூல் நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராட்டத்தையும் தன்னிகரற்ற போராளியையும் அறிமுகப்படுத்துகிறது. இந்திய மக்களுக்கு எதிராக - ராணுவத்துக்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாகப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் ஐரோம் ஷர்மிளாவின் குரலை ஒலிப்பதுடன் இந்திய அரசின் இன்னொரு முகத்தையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது. வீதியில் இறங்கிப் போராடுவோரையெல்லாம் வன்முறையாளர்களாகப் பார்க்கப் பழகிவிட்ட நம்முடைய மனசாட்சியை நோக்கி கடுமையான கேள்விகளையும் நூல் எழுப்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.