மௌனியின் மறுபக்கம்-ஜே.வி.நாதன்; பக்.152; ரூ.75; விகடன் பிரசுரம்; சென்னை-2; 044-4263 4283.
இருபத்து நான்கு சிறுகதைகள் மட்டுமே எழுதி எழுத்துலகில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளவர் "மணிக்கொடி' எழுத்தாளரான மௌனி. "சிறுகதையின் திருமூலர்' என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரான அவரோடு பதினாறு வருடம் நெருங்கிப் பழகும் அபூர்வ வாய்ப்பைப் பெற்ற ஜே.வி.நாதன் இந்த நூலை அனுபவப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் எழுதியுள்ளார். நூலாசிரியருக்கு எஸ்.மணி என்ற தனது பெயரில் மௌனி எழுதிய கடிதங்கள் அவரின் கையெழுத்திலும் உள்ளது பொக்கிஷமாக அமைந்திருக்கிறது.
தேன்மழை, கணையாழி, தாய் இதழ்களில் வெளியான மௌனியின் பேட்டிகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. "ஓர் எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரிந்திருப்பதை விட எதை எழுதக்கூடாது என்று அவசியம் தெரிந்திருக்க வேண்டும்', "என்னுடைய 24 கதைகளின் 300 பக்கங்களை ஜீரணிக்கவே இங்குள்ளவர்களுக்கு இன்னும் 200 வருடங்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன்', "என் எழுத்து ஏன் புரியலைன்னு எனக்குப் புரியலை', இவை பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு மௌனியின் பதில்கள்.
மௌனி பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள எண்ணற்ற தகவல்களை தரும் ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.