தகராறு - கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும்
தகராறு - கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும் -யொஹான் கால்டுங்- தமிழில்: சுப. உதயகுமாரன்; பக்.168; ரூ.85; விகடன் பிரசுரம், சென்னை -2; )044-2852 4074.
தகராறு - கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும் -யொஹான் கால்டுங்- தமிழில்: சுப. உதயகுமாரன்; பக்.168; ரூ.85; விகடன் பிரசுரம், சென்னை -2; )044-2852 4074.
தகராறு என்பது தவறானது அல்ல. மனித வாழ்க்கைக்குத் தகராறு மிகவும் இன்றியமையாதது. கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலை தகராறு. தகராறு முற்றும்போது தீர்வு ஒன்று உருவாகும். தகராறுகளுக்கு நிவாரணம் என்ன? என்பதைப் பற்றி இந்த நூல் விரிவாக அலசுகிறது.
மனிதனுக்குள் மற்றும் மனிதருக்கிடையே எழும் முரண்பாடுகள்- சிறுதகராறுகள், சமூகங்களிடையே எழும் பிணக்குகள்-குறுந்தகராறுகள், அரசுகளுக்கும், மக்களுக்கும் இடையே எழும் தகராறுகள்- பெருந்தகராறுகள், பிராந்தியங்களுக்கும், நாகரிகங்களுக்கும் இடையேயான சண்டைகள்-மாபெரும் தகராறுகள் என தகராறுகள் வகைப்படுத்தப்பட்டு, அவை ஒவ்வொன்றையும் உதாரணங்கள் மூலம் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
ஒரு தகராறு என்பது மனப்பாங்கு - செயல்பாடு - முரண்பாடு என மூன்றாகப் பிரிக்கப்பட்டு அதைப்பற்றி 11 பக்கங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பிரச்னையின் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்ப்பதற்குப் பழக வேண்டும். இதற்கு டிரான்சென்ட் முறையே பிரதானமானது என்பதை ஆசிரியர் அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
தகராறு, தீர்வுகளுக்குத் திருக்குறளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவருடன் நூலாசிரியர் சுப. உதயகுமாரன் உரையாடுகிறார். கேள்வி-பதில் உரையாடலில் 60 குறள்கள் பொருத்தமாக இடம் பெறச் செய்திருப்பது நூலாசிரியரின் நுட்பத்தை வெளிக் காட்டுவதாக உள்ளது.