SWAMINATHAN
நூல் அரங்கம்

பயணம் தொடர்கிறது... ஆனால் பயணி இறந்துவிட்டான்!

பிரபலங்களின் வாழ்விலோடு ஒப்பிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள், சம்பவங்களைச் சிறுசிறு தகவல்களாக விளக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திச் சேவை

பயணம் தொடர்கிறது... ஆனால் பயணி இறந்துவிட்டான்!- சுரானந்தா; பக்.132; ரூ.80; சுரா பதிப்பகம், சென்னை-600 040; ✆ 044- 4204 3273.

சாமானியர்களும் எளிதில் புரியும் வகையில் எளிய நடையில், அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், இதிகாசங்கள், வரலாறு போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் வாழ்விலோடு ஒப்பிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள், சம்பவங்களைச் சிறுசிறு தகவல்களாக விளக்கப்பட்டுள்ளன.

'மனிதர்கள் உணவின்றி பல நாள்கள் வாழலாம்; தண்ணீரின்றி சில மணி நேரம் இருக்கலாம்; சுவாசிக்காமல் சில விநாடிகள் இருக்கலாம். ஆனால், நினைவின்றி இருக்க முடியாது' என்று கூறும் நூலாசிரியர் பகல்நேரச் சிந்தனைகள் அச்சமில்லை என்பதோடு, இரவு நேரச் சிந்தனைகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதை எடுத்தியம்புகிறார்.

'எதையும் துரத்திக் கொண்டு ஓடாதே; நிம்மதியாக அமர்ந்து ஓய்வெடு, உனக்கென்று இயற்கை கொடுத்த வேலையைச் செய்; அடுத்தவனை மதிப்பீடு செய்யாதே, சுமையை இறக்கிவை; அனைவரிடமும் அன்பு காட்டு...' என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

கிருஷ்ணர், பீஷ்மர், புத்தர், முல்லா, மகாத்மா காந்தி, தத்துவ ஞானி சாக்ரடீஸ், அலெக்சாண்டர் உள்ளிட்டோரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் மனக் குழப்பங்களில் இருந்து விடுபட வழிகோலும். பல நாள்கள் தூங்காமல் ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி க்யூரி தன்னை அறியாமல் உறக்கத்திலேயே கண்டுபிடிப்பின் கோட்பாட்டை எழுதியிருப்பதன் வாயிலாக, உறக்கத்திலும் மனம் வேலை செய்கிறது என்ற உதாரணம் மூலம் மனிதனுக்குள் 'ஆன்மா' உள்ளது என்பதை உணர்த்துகிறார்.

நகரமயமாக்கல், மதுப்பழக்கங்கள், போதை மருந்துகளின் பயன்பாடு போன்றவையே மனிதர்களின் மன அழுத்தத்துக்குக் காரணமாக அமைகிறது என்று கூறும் நூலாசிரியர், நல்ல பழக்க, வழக்கங்களைக் கடைப்பிடித்தல் அவசியம் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாரடைப்பு... இதையெல்லாம் சாப்பிடக் கூடாது!

மொழியுரிமை என்றாலே முதல்வர் மு.க. ஸ்டாலின்தான்: உதயநிதி

இன்ஸமாம் உல் ஹக்கின் 33 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!

2025-ல் அதிகம் வசூலித்த 30 திரைப்படங்கள்!

பிக் பாஸ் 9 : கனி வெளியேறிய நாளை வாழ்வில் மறக்கமாட்டேன் - விஜே பார்வதி

SCROLL FOR NEXT