முகப்பு
நூல் அரங்கம்

இந்திய விடுதலைப் போரில் நியோகி ஜகன்னாத ஐயர்

ராமநாதபுரம் ராஜசிங்கமங்கலத்தில் 1748-1823-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த நியோகி ஜகன்னாத ஐயர் நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துகொண்டதையும், அவரை 'தமிழ்நாட்டு நெப்போலியன்' என்று கூறும் அளவுக்கு ஆயுதப் போராட்டத்தில் பங்கு இருந்ததை நூலாசிரியர் விளக்குகிறார்.

Updated On : 7 ஏப்ரல் 2026, 3:15 pm IST
பகிர்:

இந்திய விடுதலைப் போரில் நியோகி ஜகன்னாத ஐயர்-மு.பாலகிருஷ்ணன், பக். 116; ரூ. 200; வசந்தா பதிப்பகம், 26 குறுக்கு தெரு, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-600 088.

ராமநாதபுரம் ராஜசிங்கமங்கலத்தில் 1748-1823-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த நியோகி ஜகன்னாத ஐயர் நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துகொண்டதையும், அவரை 'தமிழ்நாட்டு நெப்போலியன்' என்று கூறும் அளவுக்கு ஆயுதப் போராட்டத்தில் பங்கு இருந்ததை நூலாசிரியர் விளக்குகிறார்.

ஜகன்னாத ஐயர் உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்தல், வேலு நாச்சியாரின் தலைமையில் மருது சகோதரர்கள் வழிகாட்டுதலில் சிவகங்கைக்குச் சென்ற படையில் இருந்து போரிட்டது, காவல் நிலையங்களைத் தகர்த்த போரில் ஐயரின் பங்கு, வீரபாண்டியரோடு இணைந்து செயல்படுதல், திப்பு சுல்தானுடனான சந்திப்பு, ஜம்பு தீபகற்ப பிரகடனத்தில் ஐயரின் பங்களிப்பு, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதிக்கு உறுதுணை, பினாங்குக்கு கப்பலில் நாடு கடத்தப்படுதல் என்று தனது வாழ்க்கை முழுவதும் போராட்டத்திலேயே கழித்தவர் ஐயர். திண்டுக்கல் ஆட்சியரின் உத்தரவால், ஜகன்னாத ஐயர் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டு வீரமரணம் அடைதல் வரையில் அவருடைய வாழ்க்கையைப் படிக்கப் படிக்க மெய்சிலிர்க்கிறது.

Advertisement

Advertisement

பிராமணர்களின் அறிவையும், போர்க்குணத்தையும் அறிந்த கிருஷ்ணதேவராயர் தனது அமைச்சர் தெனாலி ராமனோடு ஆலோசித்து, தெலுங்கு பேசும் 6 ஆயிரம் பிராமணர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்து, ஆட்சி அதிகாரத்தை அளித்து தன்னுடைய நாட்டை வலிமையாக்கியதாகவும், இந்த பிராமணர்களே 'நியோகிகள்' என்று அழைக்கப்பட்டதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இவர்கள் தென் இந்தியாவிலும், மகாராஷ்டிரத்திலும் தற்போதும் இருப்பதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.