பிரபஞ்ச தியானமும் பிராணாயாமமும்
10% பேர் வரையே மூளையை சரியான முறைப்படி பயன்படுத்துகின்றனர். நல்ல முறையில் பயன்படுத்தியோர் சித்தர்கள் என்ற விளக்கத்தை அளிக்கிறார் நூலாசிரியர்.
பிரபஞ்ச தியானமும் பிராணாயாமமும் - திருமலை விசாகன்; பக். 163; ரூ. 210; சத்யா என்டர்பிரைசஸ், சென்னை-600 094; ✆ 044-4507 4203.
உடலும் மனமும் நலமோடு இருந்தால் நல்ல வாழ்க்கை வாழலாம் என்பார்கள். ஆனால், இவ்விரண்டோடு மூளையையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்; 10% பேர் வரையே மூளையை சரியான முறைப்படி பயன்படுத்துகின்றனர். நல்ல முறையில் பயன்படுத்தியோர் சித்தர்கள் என்ற விளக்கத்தை அளிக்கிறார் நூலாசிரியர்.
உடற்பயிற்சியையும், யோகா பயிற்சியையும் நாள்தோறும் மேற்கொண்டு, சரிவிகித உணவை உண்டால் நோயின்றி வாழலாம் என்றும், சர்க்கரை, ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட பல முக்கிய நோய்கள் வருவதற்கான காரணங்களையும் அவர் விளக்கியிருக்கிறார்.
Advertisement
புலனடக்கம், புத்துணர்வு, இறந்து வாழ்தல், சுகப் பிரசவம், மூச்சுப் பயிற்சி, பிராணயோகம், உடலும் உணவும், உள்ளுறுப்புகளைச் சுத்தம் செய்தல், வாசி யோகம் உள்ளிட்ட 29 தலைப்புகளில் நூலாசிரியர் சுகமான வாழ்க்கையை வாழ நல்வழியைக் காட்டுகிறார்.
ஐம்புலன்களைக் கொண்ட மனிதர்கள் அடக்கியாள வேண்டியவை, மனதைக் கட்டுப்படுத்துவதன் அவசியமும் நோக்கமும், உயிர் ஆற்றலின் மகத்துவம், சக்தி உடல்கள், தியானம் போன்றவற்றுக்கான அறிவியல், ஆன்மிக ரீதியான விளக்கங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நோய்கள் வராமல் காத்துக்கொள்வது எப்படி?, நோய்கள் வந்தால் அதை நமக்கு நாமே சரி செய்துகொள்வது எப்படி?, மனதைக் கட்டுப்படுத்துதல், தீமைகளையும் தவறானவற்றையும் கைவிடுவதன் அவசியம் போன்றவற்றை எளிமையாகப் புரிய வைத்துள்ளார் நூலாசிரியர். சொல்லின் செல்வர் அல்ஹாஜ் எம்.எம்.