முகப்பு
கிரிக்கெட்

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாகும் ஸ்ரேயாஷ் ஐயர்?

இந்திய டி20 அணிக்கு நியமிக்கப்படவிருக்கும் புதிய கேப்டன் குறித்து...

Updated On : 19 ஏப்ரல் 2026, 4:46 pm IST
ஸ்ரேயாஷ் ஐயர். - படம்: பஞ்சாப் கிங்ஸ்.
பகிர்:

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாக ஸ்ரேயாஷ் ஐயர் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய டி20 அணிக்கு தற்போதைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.

Advertisement

Advertisement

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். பஞ்சாப் அணியை வழிநடத்தும் ஸ்ரேயாஷ் ஐயர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.

பஞ்சாப் அணியை ஸ்ரேயாஷ் கடந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றினார். முந்தைய கேகேஆர் அணியை கோப்பை வெல்ல வைத்தார். அதனால், இந்திய அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

Shreyas Iyer to become captain of the t20 Indian team?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.