100-ஆவது ஐபிஎல் போட்டியில் கேப்டனாக விளையாடும் ஷ்ரேயாஸ் ஐயர்..! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து...
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது நூறாவது ஐபிஎல் போட்டியில் கேப்டனாக விளையாடுகிறார். பஞ்சாப் அணிக்கு இது அவரது 29ஆவது போட்டியாக இருக்கிறது.
தரம்சாலாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல்முறையாக தில்லி டேர்டெவில்ஸ் (தற்போதைய தில்லி கேபிடல்ஸ்) அணிக்கு 2018 ஏப்.27ஆம் தேதி கேப்டனாக விளையாடினார்.
Advertisement
Advertisement
தில்லிக்குப் பிறகு கொல்கத்தா அணியை வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சீசன் முதல் பஞ்சாப் அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்ற பஞ்சாப் அணி அடுத்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்துள்ளது. தனது 100-ஆவது போட்டியிலாவது இந்தத் தோல்விகளுக்கு ஷ்ரேயாஸ் முற்றுப் புள்ளி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வருங்கால இந்திய டி20 அணிக்கும் கேப்டனாகும் வாய்ப்பு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
A big day for Sarpanch Saab shreyas iyer 100th match for his captaincy!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.