FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கேப்டன் பொறுப்புக்காக என்னை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்காக தன்னை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என ஷ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.

Updated On : 7 ஜூன் 2026, 6:46 pm IST
ஷ்ரேயாஸ் ஐயர் - படம் - ஏபி
பகிர்:

இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்காக தன்னை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என ஷ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.

இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (ஜூன் 6) அறிவித்தது. டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்காக தன்னை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என ஷ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்காக என்னுடைய குணங்களை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. இதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அதே போன்று இருப்பதையே விரும்புகிறேன். யாரைப் போன்றும் இருக்க நான் விரும்பவில்லை. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் நிறைய சவால்களை சந்தித்துள்ளேன். எனக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும். மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு சிறுவனின் ஆசையாக இருக்கும். மும்பை அணிக்காக விளையாடுவதற்கு போட்டி அதிகம் இருக்கும். அந்த அணிக்காக விளையாடி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

என்னுடைய மனநிலை எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்பதையே சிந்திக்கும். கிரிக்கெட் மட்டுமின்றி வேறு எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும், சவால்கள் அதிகம் இருப்பது சுவாரசியமாக இருக்கும். சவால்கள் அதிகம் இருப்பது உங்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், எனக்கு கேப்டனாக நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் இது மிகவும் சவால் நிறைந்த பொறுப்பு என்றார்.

summary

Shreyas Iyer has stated that he does not need to change himself for the role of Indian team captain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments