தோல்வி பயம் கிடையாது... இந்திய டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி!
இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டி குறித்து...
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “இந்த அணியில் தோல்வி பயம் என்பதற்கு இடமே கிடையாது” எனப் பேசியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பதவி வகித்ததும் அயர்லாந்திடம் 0-2, இங்கிலாந்திடம் 0-4 என தொடரை முழுமையாக இழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜிம்பாப்வே அணியிடம் விளையாட இருக்கிறது.
முதல் டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
எங்களுக்கு இங்கிலாந்தில் கடினமான காலகட்டமாக அமைந்தது. ஆனால், அங்கும் சில நேர்மறையான விஷயங்கள் கிடைத்துள்ளன.
ஓர் அணியாக அடுத்த என்ன விஷயங்களை உருவாக்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டோம். சமயோசித புத்தி, விழிப்புணர்வு, தகவமைக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நாங்களில் சிலர் இப்போதுதான் முதல்முறையாக விளையாடுகிறோம். விரைவில் தகவமைத்துக்கொண்டால், விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
எங்கள் அணியில் தோல்வி பயம் கிடையாது. அப்படியான எண்ணம் உங்கள் மனதில் இருந்தால், உங்கள் இடத்தை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே முடியும். அந்தப் பயம் இல்லையெனில், உங்களின் முழுமையான திறனை வெளிக்கொணர முடியும்.
வெளியே என்ன சொல்கிறார்கள் என்ற சிந்தனை எங்களுக்கு இல்லை. நாங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறோம். நல்ல கிரிக்கெட்டை அணியாக சேர்ந்து விளையாடினால் அணிக்கு நல்லது என்றார்.
Fear of failure has no place in this team, says India skipper Shreyas Iyer
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.