முதல்தர போட்டிகளில் 8,500+ ரன்கள் குவித்த அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய அணியில் தேர்வு ஆகாதது ஏன்?
உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அசத்தும் அபிமன்யூ ஈஸ்வரன் குறித்து...
உள்ளூரில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 8,500க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ள அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக தமிழக வீரர் அபினவ் முகுந்த் உள்ளூர் போட்டிகளிலும் அசத்தியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது பல கேள்விகளை எழுப்பியது.
சென்னையில் நடைபெற்றுவரும் துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் கிழக்கு - தென் மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. இதில் கிழக்கு மண்டலம் டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த அணியின் தொடக்க வீரரான அபிமன்யூ ஈஸ்வரன் (31 வயது) 72 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக ரன் அவுட் மூலமாக ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலமாக உள்ளூர் போட்டிகளில் 8,500 என்ற மைல்கல்லை தாண்டியுள்ளார். மொத்தமாக 8561 ரன்கள் எடுத்துள்ள இவரை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாதது பலரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளைப் பந்தில் (டி20, ஒருநாள்) அசத்தும் இந்திய அணி சிவப்பு பந்தில் (டெஸ்ட்) மட்டும் சொதப்பி வருவது தொடர்கதையாக இருக்கிறது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பளித்தால் இந்திய அணி டெஸ்ட்டிலும் பல சாதனைகளை படைக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
In first class cricket Abhimanyu Easwaran 8,500 plus runs but not selected in Test Cricket for Team India, unfair selection
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.