FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆரம்பமாகிறது கிரிக்கெட் திருவிழா: பண்டிகையைக் கொண்டாடுங்கலே...

மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்கள் உலகக் கோப்பைக்குத் தயாராக இந்திய அணிக்கு உதவும்.

27 ஆகஸ்ட் 2026, 7:15 pm IST
பகிர்:

நவராத்திரி, தீபாவளி, பொங்கல், ஹோலி பண்டிகைகளையொட்டி நடைபெறும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர்களை திருவிழாவைப்போலப் போல கோலாகலமாகக் கொண்டாடவுள்ளதாக ஜியோஸ்டார் அறிவித்துள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது இலங்கை டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ளது. இந்தத் தொடரைத் தொடர்ந்து உள்நாட்டில் நடைபெறவுள்ள தொடர்களில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. இந்திய மண்ணில் மட்டும் செப்டம்பர் 27 முதல் மார்ச் 3, 2027 வரை மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்டுகளில் மொத்தம் 22 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்கள் உலகக் கோப்பைக்குத் தயாராக இந்திய அணிக்கு உதவும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தாண்டு ஜனவரி 21 முதல் மார்ச் 3 வரை பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான தொடராக அமையவுள்ளது.

Advertisement

Advertisement

நவராத்திரி, தீபாவளி, பொங்கல், ஹோலி என பண்டிகைகளையொட்டி இந்தத் தொடர்கள் நடைபெறவுள்ளன. எனவே, இதைப் பண்டிகைகளுடன் சேர்த்து திருவிழாவாகக் கொண்டாடவுள்ளதாக ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் முடிவு செய்துள்ளது. இந்தத் தொடர்கள் அனைத்தும் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை:

  • இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் - செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17 வரை - 3 ஒருநாள்; 5 டி20

  • இந்தியா vs இலங்கை - டிசம்பர் 13 முதல் டிசம்பர் 27 வரை - 3 ஒருநாள்; 3 டி20

  • இந்தியா vs ஜிம்பாப்வே - ஜனவரி 3, 2027 முதல் ஜனவரி 9, 2027 வரை - 3 ஒருநாள்

  • இந்தியா vs ஆஸ்திரேலியா - ஜனவரி 21, 2027 முதல் மார்ச் 3 2027 வரை - 5 டெஸ்ட்

இந்தத் தொடர்களுக்கு இடையே இந்திய அணி அக்டோபர், நவம்பரில் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொள்கிறது. அங்கு தலா 5 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்கள் மற்றும் இரு டெஸ்டுகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. மேலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து இந்தியாவுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் சொந்த மண் என்ற கோணத்தில் நடைபெறுவதால், இந்தியாவில் நடைபெற்றாலும்கூட ஆப்கானிஸ்தானின் சொந்த மண்ணாகவே இந்தத் தொடர் கருதப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments