FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இந்திய அணி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.

25 செப்டம்பர் 2026, 5:49 pm IST
விராட் கோலி - படம் | பிசிசிஐ
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 27) திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிலையில், இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் சிலர் ஜப்பானில் நடைபெறும் ஆசியப் போட்டியில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ளதால், முதல் ஒருநாள் போட்டியில் சரியான காம்பினேஷனுடன் களமிறங்க இந்திய அணி திட்டமிடுகிறது. டி20 அணிக்கான கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜப்பானில் இருப்பதால், அவருக்குப் பதிலாக அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

summary

The Indian team is engaged in intensive training for the ODI series against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments