கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்
தொடர் தோல்விகள் காரணமாக தன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி கவலைப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்விகள் காரணமாக தன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி கவலைப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர், இந்திய அணி நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களை சொந்த மண்ணிலேயே இழந்தது. அதேபோன்று, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் மோசமான தோல்வியைத் தழுவியது.
கம்பீர் தலைமையில் கிடைத்த ஒரே ஆறுதல் என்னவென்றால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்ததே.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கம்பீர், “விமர்சனமா? கோப்பைகளை வெல்வதே எனது வேலை. அதை மட்டுமே நான் நம்புகிறேன். அதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். மற்றவர்களுக்கு எனக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். நான் மற்றவர்களின் விருப்பங்களையோ, கருத்துகளையோ பொருட்படுத்துவதில்லை” என்றார்.
மேலும், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியுசிலாந்து, வங்கதேசம் போன்ற அணிகளுக்குப் பின் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. தரவரிசை முக்கியமில்லை. அதில், எங்களுக்கு எந்தச் சிரமமுமில்லை. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பின், நாங்கள் சிறப்பான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம்” என்றார்.
காலேவின் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற பின்னர், அதே அணியை இந்தியா தக்கவைக்குமா என்ற கேள்விக்கு, “எங்களுக்கு 20 விக்கெட்டுகளைப் பெற்றுத்தரக்கூடிய சிறந்த பந்துவீச்சு கொண்ட படையை களமிறக்க முயற்சி செய்வோம்” என்று பதிலளித்தார்.
அதேபோல, காலேவில் நடைபெற்ற போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 25 ஓவர்கள் மட்டுமே வீசிய குல்தீப் யாதவ் குறைவாகப் பந்துவீச வைக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு, “குல்தீப் சிறப்பாக பந்து வீசுபவர். ஆனால், போட்டியில் சில முடிவுகள் கேப்டனின் கையிலேயே உள்ளது” என்றார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கியக் காரணமாகத் திகழ்ந்த இளம் வீரர்கள் மானவ் சுதார் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை கம்பீர் பாராட்டினார்.
மேற்கொண்டு பேசிய அவர், “கிரிக்கெட்டில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானதே. நம்முடைய வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து, தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். இது ஒன்று, இரண்டு போட்டிகளில் தீர்மானிக்கப்படுவதில்லை” என்றார்.
டெஸ்ட் தொடர் பற்றிப் பேசுகையில், ”நான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையே விரும்புவேன். இரு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்தால், அடுத்தப் போட்டியில் மீண்டு வருவது மற்ற அணிக்கு கடினமாக இருக்கும். அவர்களால், அதிகபட்சமாக ஆட்டத்தை டிரா நோக்கியே கொண்டு செல்ல முயற்சிக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
Indian cricket team head coach Gautam Gambhir has stated that he is not concerned about the criticism directed at him due to a string of defeats
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.