விண்வெளி மாயம் 1000
கோள்கள், நட்சத்திரங்களின் ஆண்டுகள், எடையளவு, தோற்றம் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
விண்வெளி மாயம் 1000- இதழியல் மாமணி மானோஸ்; பக். 160; ரூ.160; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2433 1510.
'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று குழந்தைகளைக் கேட்டால் வானத்தைக் காட்டுவர். அந்த வானத்தைப் பற்றியும், சூரியக் குடும்பம், கோள்கள் போன்ற பல்வேறு விஷயங்களை துல்லியமாக, எண்ணற்ற தரவுகளுடன் அறியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தேலீஸ் என்ற கிரேக்க அறிஞர் கிரகணங்கள் குறித்து துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார் என்றும், அப்போதே வானவியல் அறிஞர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருந்துள்ளார் என்றும், வானவியல் அறிவைப் பெற்றவர்கள் பெரும்பாலானோர் சிந்தனையாளர்களாக, தெளிந்த மனம் கொண்டவர்களாக விளங்குகின்றனர். சாமானியர்களும் விண்வெளி அறிவைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நூலை எழுதியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
Advertisement
வான்வெளி மண்டலம், ஒளியின் விகாரங்கள், பிரபஞ்சக் கோளம், புவி ஈர்ப்புச் சக்தி, பால்வீதி, காந்த மண்டலம், சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள், டைனோசர்கள், செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா?, சூரியக் குடும்பத்தில் நுழைந்த மர்ம விண்பொருள், நிலவுக்குச் செல்லும் பட்டுப்பூச்சி, செயற்கைக்கோள், விண்கலம், சூரியனைத் தொடும் 'பார்கர் சோலார்' திட்டம், 100 கோடி ஆண்டுகளில் உலகம் உள்பட 45 தலைப்புகளில் ஏராளமான அறிவியல் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கோள்கள், நட்சத்திரங்களின் ஆண்டுகள், எடையளவு, தோற்றம் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.