முகப்பு
நூல் அரங்கம்

உள்ளத்தனையது உயர்வு

நமது உள்ளத்தில் எழும் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துவது குறித்து நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜூலை 2026, 3:46 pm IST
பகிர்:

உள்ளத்தனையது உயர்வு- முனைவர் வே. குழந்தைசாமி; பக். 152; ரூ. 170; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட், பெங்களூரு, ✆ 74185 55884.

கல்வியின் நோக்கம் மனித உள்ளத்தை பண்படுத்துவதே தவிர பொருள் சார்ந்தது கிடையாது என்பதை இந்த நூலின் மூலம் அனைவருக்கும் உணர்த்த முயற்சிக்கிறார் நூலாசிரியர் முனைவர் வே.குழந்தைசாமி.

மானிடப் பண்புகளும் நடத்தை நெறிகளும் சமுதாயத்தில் உரிய இடத்தைப் பெறவில்லை என வருத்தம் தெரிவிக்கும் அவர், விழுமியங்கள், அருளாளர்களின் ஆன்மிகக் கருத்துகள், மனிதவள வல்லுநர்களின் அறிவுரைகள் ஆகியவற்றை தொகுத்து  தற்போதைய சூழலுக்கு ஏற்ப நூலைத் தொகுத்துள்ளார்.

Advertisement

Advertisement

கல்லூரி பாடத்திட்டத்தில் மனம், எண்ணத்தின் ஆற்றல் உள்ளிட்டவை குறித்த பாடங்கள் வேண்டும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. நூலாசிரியர் தமிழ் இலக்கியப் புலவர்களின் எடுத்துக்காட்டுகளையும், வெளிநாட்டு அறிஞர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஆகியோரின் சிந்தனைகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார்.

நமது உள்ளத்தில் எழும் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துவது குறித்து நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெற்றி பெற வேண்டுமெனில் நமது உள்ளத்தில் தூய்மையான, உயர்ந்த எண்ணங்கள் உருவாக வேண்டும். அவை நமது சமுதாயத்துக்கு நன்மை செய்யக் கூடியவையாக இருப்பதுடன், சுயக் கட்டுப்பாட்டுடன் நமது இலக்கை நோக்கி நகர வேண்டும்.

இலக்கை எட்டும் வரை சோர்வின்றி, எங்கேயும்  பின்வாங்காமல்  முன்னேறி நகர்ந்து செல்வதற்கான மனவலிமையை உருவாக்க வேண்டும் என்பது தற்போதைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments