நாலடியார்
காமத்துப்பாலில் பொது மகளிர் நிலை, கற்புடை மகளிர் யார்? எப்படி செயல்படுவர்? என்பதற்கு பாடல்களுடன் தரப்பட்டுள்ள விளக்கங்கள் சிறப்பானவை.
நாலடியார் - சமண மாமுனிவர்கள்- உரை விளக்கம்: செ. சசிகலா தேவி; பக். 186; ரூ. 180; சுரா பதிப்பகம், சென்னை-600 040, ✆ 044-4862 9977.
சமண முனிவர்கள் பலரால் இயற்றப்பட்டு, தொகுக்கப்பட்ட புகழ்பெற்ற தமிழ் நீதி நூல்களில் ஒன்றான நாலடியார், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இதைத் தொகுத்தவர் பதுமனார். வாழ்வியல் நெறிகளை நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் உணர்த்தும் இந்நூல் திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்படும் நூலாகும்.
திருக்குறளை போன்றே நாலடியாரிலும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பிரிவுகள் உண்டு. சிறப்புமிக்க நாலடியாரை நயம்பட உரைவிளக்கம் செய்துள்ளார் நூலாசிரியர்.
Advertisement
Advertisement
அறத்துப்பாலில் துறவறவியல், இல்லறவியல், பொருட்பாலில் அரசியல், நட்பியல், இன்பவியல், துன்பவியல், பொதுவியல், பகை இயல், பன்னெறியியல், காமத்துப்பாலில், இன்ப துன்ப இயல், இன்பவியல் ஆகிய பிரிவுகளில் நானூறு பாடல்களுக்கு பொருளும் விளக்கமும் பொருத்தமாக தரப்பட்டுள்ளன.
"செல்வம் நிலையாமை' என்ற பாடலுக்கு அரிச்சந்திரன் ஒரு நாட்டின் மன்னராக இருந்தபோதிலும், விதிவசத்தால் மயானத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு செல்வம் உடன் வரவில்லை. ஆகவே, செல்வம் நம்மை விட்டுப்போகக்கூடியது என்பதை அறுசுவை யுண்டி... என்ற நாலடியார் பாடலுக்கு தரப்பட்டுள்ள விளக்கம் எதார்த்தமாக உள்ளது.
நட்பின் இலக்கணம், நட்பாராய்தல், நட்பில் பிழை பொறுத்தல் என்ற தலைப்புகளில் தரப்பட்டுள்ள பாடல்கள் நட்பை எப்படி பேணவேண்டும், யாரை நட்பாக கொள்ள வேண்டும் என்பதை இன்றைய எண்ம உலகத்தினரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் நீதி உரையாக இருக்கிறது.
காமத்துப்பாலில் பொது மகளிர் நிலை, கற்புடை மகளிர் யார்? எப்படி செயல்படுவர்? என்பதற்கு பாடல்களுடன் தரப்பட்டுள்ள விளக்கங்கள் சிறப்பானவை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.