முகப்பு
நூல் அரங்கம்

வெற்றியின் வேகம்

இளைய தலைமுறையினருக்கு உற்சாக ஊற்று பொங்கும் விதமாக உருவான தன்னம்பிக்கை நூல் இது.

Updated On : 7 ஜூலை 2026, 3:44 pm IST
பகிர்:

வெற்றியின் வேகம்-பாலபாரதி; பக். 128; ரூ. 150; எஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 122, ✆ 80158 27644.

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஓட்டபந்தய வீரர் பாலசுப்பிரமணியன், 1990-களில் உள்ளூர் போட்டிகளில் சாதனைகளைப் படைத்து தென்கொரிய தலைநகர் சியோலில் தங்கம் வென்ற உண்மைக் கதையானது நூல் வடிவம் பெற்றுள்ளது.

யாரும் கண்டுகொள்ளாத அந்த வீரனை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் இந்த நூல் சாமானியராலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை அளிக்கும் வகையில், எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் சாம்பியனாக உச்சம் தொடவும், தனது இலக்கை அடையவும் அவருக்கு முன் இருந்த தடைகள், அவற்றைத் தகர்த்தெறிந்தது, பாசாங்கு இல்லாமல் உள்ளது உள்ளபடியாக எடுத்துரைக்கும் இந்த நாவல் திரைப்படத்துக்கு இணையாக விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.

"ஸ்போர்ட்ஸ் ஷூ' வாங்க வசதியில்லாமல் கோயில் வாசலில் விட்டுச் செல்லும் ஷூக்களை அணிந்து சில தெருக்கள் ஓடிவந்து விட்டு விடுவது, விளையாட்டுச் சாதனங்களை விற்கும் கடைப் பெண்ணுடன் அவர் மேற்கொண்ட இளவட்ட குறும்புகள், பயிற்சியாளர் ரவி, போட்டிக்குத் தயாராகுதல், காவல் துறை விசாரணை, பயிற்சியாளர் ரவி- மீனா காதல் திருமணம்... என்று படிக்கப் படிக்க சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.

வெற்றிக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பும் பாலசுப்பிரமணியன், தனக்கான பாராட்டு விழாவில் 'தங்க மகன் பாலு இலவசத் தடகளப் பயிற்சிப் பள்ளி' தொடங்குவதாக அறிவித்ததும், அதை நிறைவேற்றிக் காட்டி பல வீரர்களை உருவாக்கியதும் நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சோர்ந்திருக்கும் விளையாட்டு வீரர்கள் இந்த நூலைப் படித்தால், சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற உத்வேகம் பெறுவார்கள் என்றால் மிகையாது. இளைய தலைமுறையினருக்கு உற்சாக ஊற்று பொங்கும் விதமாக உருவான தன்னம்பிக்கை நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments