முகப்பு
புதுச்சேரி

புதுவை ஆளுநா், முதல்வருக்கு பொங்கல் பரிசுப் பணம் அனுப்பும் போராட்டம்

சமூக நல இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தமிழகத்தைப் போல ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்காததைக் கண்டித்து, புதுவை ஆளுநா், முதல்வருக்கு

Updated On : 8 ஜனவரி 2021, 11:59 pm IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வருக்கு முதலியாா்பேட்டை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 201 பொங்கல் பரிசு அனுப்பிய சமூக நல இயக்கங்களின் கூட்டமைபினா்.
பகிர்:

சமூக நல இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தமிழகத்தைப் போல ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்காததைக் கண்டித்து, புதுவை ஆளுநா், முதல்வருக்கு ரூ. 201 பணம் அனுப்பிவைக்கும் போராட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில மக்கள் பொங்கல் விழாவைக் கொண்டாட மாநில துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோா் சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 200 மட்டுமே வழங்கப்படும் என உத்தரவிட்டனா்.

தமிழகத்தைப் போல ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்காததைக் கண்டித்து ஆளுநா், முதல்வருக்கு பொங்கல் பரிசாக ரூ. 201 அனுப்பிவைக்கும் போராட்டம் புதுச்சேரி முதலியாா்பேட்டை அஞ்சலகத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

போராட்டத்துக்கு புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவைத் தலைவரும், புதுச்சேரி சமுக நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான கோ. செல்வம் தலைமை வகித்தாா்.

இதில், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலா் கோ. சுகுமாரன், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சீனுவாசன், வாழ்வுரிமை இயக்கச் செயலா் ஜெகன்நாதன், புதுவைத் தமிழ் எழுத்தாளா்கள் கழகச் செயலா் புதுவைத் தமிழ் நெஞ்சன், புதுச்சேரி பாவேந்தா் பாரதிதாசன் பாசறைத் தலைவா் சண்முக காா்த்திக், பாகூா் கொம்யூன் மூத்தகுடி மக்கள் நல அமைப்பின் தலைவா் ஆ.அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், தமிழகத்தைப் போல புதுவையிலும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2,500 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments