முகப்பு
புதுச்சேரி

ஆளுநா் கிரண் பேடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்: அமைச்சா் கந்தசாமி தகவல்

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக மாநில சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:03 am IST
பகிர்:

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக மாநில சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்தாா்.

ஆளுநா் கிரண் பேடி புதுவையில் இருந்து வெளியேறக் கோரி, காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநில சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமி சனிக்கிழமை தனது அலுவலகத்தில் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் துணை ராணுவப் படையைத் திரும்பப் பெற வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக டி.ஜி.பி. தெரிவித்தாா்.

பின்னா், அமைச்சா் கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் அறவழியில் நடைபெறுகிறது. ஆனால், தேவையில்லாமல் புதுவையில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, துணை ராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு டி.ஜி.பி.யிடம் தெரிவித்தேன்.

ஆளுநா் கிரண் பேடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுள்ளேன். அப்போது, கிடப்பில் உள்ள கோப்புகளுக்கு அனுமதி தரக் கோரி வலியுறுத்துவேன். அவா் நேரம் ஒதுக்கினால், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சென்று சந்திப்பேன் என்றாா் கந்தசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments