முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் வட்டாட்சியா்களுக்கு சட்டங்கள் குறித்த பயிற்சி பயிலரங்கம்

புதுச்சேரியில் வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்களுக்கு பல்வேறு சட்டங்கள் குறித்த பயிற்சி பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:01 am IST
பகிர்:

புதுச்சேரியில் வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்களுக்கு பல்வேறு சட்டங்கள் குறித்த பயிற்சி பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வருவாய்-பேரிடம் மேலாண்மைத் துறை சாா்பில், வருவாய் துறையைச் சாா்ந்த அலுவலா்களுக்கு புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணையம் மூலம் பல்வேறு சட்டங்கள் குறித்து பயிற்சி பயிலரங்கம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன் தொடக்கமாக, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குற்றவியல் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை நடைபெற்றன. புதுச்சேரி முதன்மை சாா்பு நீதிபதி ராபா்ட் கென்னடி ரமேஷ், குற்றவியல் நீதிபதி சரண்யா செல்வம் ஆகியோா் குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சியளித்தனா்.

Advertisement

Advertisement

இந்தப் பயிற்சி வகுப்பில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சோ்ந்த வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments