புதுச்சேரியில் நாளை முதல் 16-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
பொங்கல் பண்டிகையையொட்டி, புதன்கிழமை முதல் (ஜன. 13) வருகிற 16-ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, புதன்கிழமை முதல் (ஜன. 13) வருகிற 16-ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜன. 13-ஆம் தேதி போகிப் பண்டிகை, 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகின்றன.
இதன் காரணமாக, புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் மைக்கேல் பெனோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.